மின்பழுது ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் உறுதி

மழை பாதிப்பு பணிகள் குறித்து ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு
Published on
Updated on
1 min read

மழை பாதிப்பு பணிகள் குறித்து ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது,  2021ஆம் ஆண்டு மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது மழைநீர் தேங்கவில்லை.  கணேசபுரம் பகுதியில் மட்டும்தான் 11 மணிவரை தண்ணீர் தேங்கியது. மற்ற பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டன. 

மின்பழுது ஏற்பட்டாலோ கழிவுநீர் தேங்கினாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெருமழை வந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1913 என்ற எண்ணில் உதவி தேவைப்படுபவர்கள் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் மரங்கள் விழுந்தால், அதனை அப்புறப்படுத்துவதற்கு உரிய சாதனங்களுடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com