ஆருத்ரா மோசடி: 3,000 பக்க குற்றப்பத்திரிகை நாளை தாக்கல்!

ஆருத்ரா மோசடி வழக்கில் தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.
ஆருத்ரா மோசடி: 3,000 பக்க குற்றப்பத்திரிகை நாளை தாக்கல்!

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘ஆருத்ரா கோல்டு டிரெடிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்த 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது.

இது தொடா்பாக அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 21 பேரை தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் 13 பேரை கைது செய்துள்ளனர்.

அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள் ராஜசேகா், உஷா ராஜசேகா் ஆகியோா் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால் ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 6.35 கோடி பணம், ரூ. 1.13 கோடி மதிப்பிலான நகை, வெள்ளிப் பொருள்கள், 22 கார்கள், ரூ. 103 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை தாக்கல் செய்யவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com