
திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக அதிகாலை முதல் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆம்பூர் ஏ.கஸ்பா ரோடு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!
நகராட்சி நிர்வாகம் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.