மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.24 அடியாக சரிவு!

கடந்த 11 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 7.11 அடி சரிந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 11 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 7.11 அடி சரிந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் கடந்த 11 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 235 கன அடியிலிருந்து வினாடிக்கு 223 கன அடியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை அணையின் நீர்மட்டம் 96.24 அடியாக சரிந்தது.

கடந்த 11 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 7.11 அடி சரிந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு  60.07 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முழுமையாக தண்ணீர் கிடைக்கும். இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com