திருமலையில் 3 வயது சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிப்பட்டது! 

திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரையாக  பெற்றோருடன் சென்ற மூன்று வயது சிறுவனை தாக்கி கவ்விச் சென்ற சிறுத்தை பிடிப்பட்டது. 
திருமலையில் 3 வயது சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தை பிடிப்பட்டது! 

திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரையாக  பெற்றோருடன் சென்ற மூன்று வயது சிறுவனை தாக்கி கவ்விச் சென்ற சிறுத்தை பிடிப்பட்டது. 

திருமலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். அவ்வாறு ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டம் ஆதோனியை சேர்ந்த, 6 பேர் கொண்ட குடும்பத்தினர் வியாழக்கிழமை இரவு மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஏழாவது மைலில் ஆஞ்சனேய சுவாமி சன்னதியை தாண்டி சிறிது தூரம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பெற்றோர்கள் முன்னாள் சென்று கொண்டிருக்க தனது தாத்தாவுடன்  நடந்து சென்று கொண்டிருந்த கெளசிக் என்ற 3 வயது சிறுவன், அங்குள்ள கடையில் சிப்ஸ் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தான்.

அச்சமயத்தில் வனப்பகுதியில் வலது புறத்தில் இருந்து வந்த சிறுத்தை சிறுவன் கெளசிக்கை கவ்விச்சென்று வனப்பகுதிக்குள் ஓடியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த பக்தர்கள் சிறுவனின் தாத்தா மற்றும் காவல் துறையினர் சத்தம் போட்டதையடுத்து, சிறுவனை வனப்பகுதியில் விட்டுவிட்டு சிறுத்தை தப்பி ஓடியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன்

பின்னர், அப்பகுதியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் சிறுவன் அழுவதை கேட்டு, அங்கு சென்று பார்ப்பதற்குள் சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த நிலையில் இருந்த சிறுவனை மீட்டு, 108 ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக திருப்பதியில் உள்ள பத்மாவதி இருதாலயா மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் தற்போதைக்கு அபாய கட்டம் இல்லை என தெரிவித்தனர். 

சிறுத்தை சிக்கியது
இந்த நிலையில் திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரையாக பெற்றோருடன் சென்ற மூன்று வயது சிறுவனை தாக்கி கவ்விச் சென்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.

இதையடுத்து பிடிப்பட்ட சிறுத்தைக்கு வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் வைத்து மருத்துவ பரிசோதனை நடத்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுத்தையை அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சேஷாசலம் மலைப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ள நிலையில் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com