சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் புனரமைப்பு பணிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் புனரமைப்பு பணிகள்: அமைச்சர் உதயநிதி ஆய்வு

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வருகிற ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 13 வரை ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை - 2023 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் புரனமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள திட்டமிடுவதற்கென ஹாக்கி இந்தியா அதிகாரிகள் குழு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது. அதனைத் தொடந்து மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் திட்டமிடப்பட்டு மைதானத்தை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதன்மை ஹாக்கி செயற்கை ஆடுதளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை ஆடுதளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தனர்கள் அமருவதற்கான பார்வையாளர் கூடம், விளையாட்டு வீரர்களுக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற பணிகளை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com