நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா சனிக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்!

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா சனிக்கிழமை  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலியில் உள்ள பழைமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன்

நிகழாண்டுக்கான விழாவையொட்டி சனிக்கிழமை காலை சுவாமி- அம்மன் பூங்கோயில் சப்பரம் உள்வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. 

நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.  இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறுகிறது. 

கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டதும் நமச்சிவாய முழக்கத்துடன் வழிபட்ட பக்தர்கள்.

தொடர்ந்து திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 

நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு, இசைநிகழ்ச்சிகள் தினமும் மாலை 4 முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும். 

விழாவின் சிகர நிகழ்வாக ஜூலை 2 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற உள்ளது. 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com