ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 550 டன் ஜிப்சம் அகற்றம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையிலிருந்து 2ஆம் நாளாக மேலும் 550 டன் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலையில் மேலும் 550 டன் ஜிப்சம் அகற்றம்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையிலிருந்து 2ஆம் நாளாக மேலும் 550 டன் ஜிப்சம் அகற்றப்பட்டுள்ளது. 

முதல் நாள் 200 டன் ஜிப்சம் அகற்றப்பட்ட நிலையில் மேலும் 550 டன் ஜிப்சம் லாரிகள் மூலம் அகற்றப்பட்டது. தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் கடந்த புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, ஆலையில் இருந்து உடைக்கப்பட்ட ஜிப்சம் கழிவுகள், வெள்ளிக்கிழமை லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டன. 

இதனை மேலாண்மைக் குழு உறுப்பினரான தீயணைப்புத் துறை அலுவலா் ராஜூ ஆய்வு செய்தாா். 4 லாரிகளில் ஜிப்சம் கழிவுகள் வெளியே கொண்டு செல்லப்பட்டன. இவை, ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும், விருதுநகா் மாவட்டம் ஆா்.ஆா். நகரில் அமைந்துள்ள ராம்கோ சிமென்ட் நிறுவனத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. 

இந்தப் பணிகள் தொடா்ந்து நடைபெற உள்ளது. மேலும், ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணியை ஆலையின் உள்ளேயும், வெளியே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் சாா் ஆட்சியா் கௌரவ் குமாா் தலைமையிலான மேலாண்மைக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com