காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு 

2023ஆம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு நாளையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

2023ஆம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு நாளையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முதலமைச்சர் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 03.08.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப கீழ்கண்டகாவல் அதிகாரிகள் / ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது”

1 வெ.பத்ரிநாராயணன், காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்.
2 டோங்கரே பிரவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்.
3 மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.
4 சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்
5 இரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, நாமக்கல் மாவட்டம்

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க், காவல்துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை, அவர்களின் சீரிய
பணியை அங்கீகரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த சிறப்பு பதக்கம் தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

அஸ்ரா கர்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம்,
(NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டள்ளன. மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com