கோயில்களுக்கு சொந்தமான ரூ.4740 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேட்டி

கோயில்களுக்கு சொந்தமான ரூ.4740 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். 
கோயில்களுக்கு சொந்தமான ரூ.4740 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் பி.கே. சேகர்பாபு பேட்டி


 
காஞ்சிபுரம்: கோயில்களுக்கு சொந்தமான ரூ.4740 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேக  திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு புதன்கிழமை தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

திருக்கோயில்களை பாதுகாக்க கடந்த ஆண்டு ரூ.100 கோடியும், இந்த ஆண்டு ரூ.100 கொடியும் தமிழக அரசு மானியமாக ஒதுக்கி இருக்கிறது. இதுவரை கடந்த ஆண்டு அறநிலையத்துறை சார்பில் 46 திருப்பணிகளும், உபயதாரர்கள் சார்பில் 66 திருப்பணிகளும் நடந்துள்ளன. இந்த ஆண்டு அறநிலையத்துறை சார்பில் 37 பணிகளும், உபயதாரர்கள் சார்பில் 46 பணிகள் உட்பட மொத்தம் 714 கோயில்கள் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களை புதுப்பிக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டது திமுக ஆட்சி காலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான ரூ.4740 கோடி மதிப்பிலான 5001 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் 788 கோயில்கள் குடமுழுக்கு நடந்துள்ளது. 

மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் சுதந்திரமாக சென்று வழிபட அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com