முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி:  வீர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வான விளையாட்டு வீர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி:  வீர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் காஞ்சிபுரம் ஆட்சியர்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வான விளையாட்டு வீர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடகளப் போட்டிகள் கூடைப்பந்து கைப்பந்து வளைக்கோள் பந்து, கபடி சிலம்பம் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு அதில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் முதல்வர் கோப்பைக்காக சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு தயாராகி உள்ளனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட த்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வான வீரர்களை மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வழி அனுப்பி வைக்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கபடி, சிலம்பம், கூடைப்பந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற 76 வீரர் வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஊக்கப்படுத்தி, பயிற்சிகளில் மேற்கொண்ட யுக்திகளை தைரியமாக வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கூறி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com