முகச் சிதைவு நோய் பாதித்து குணமடைந்த சிறுமிக்கு வீட்டுமனைப் பட்டா!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமான சிறுமிக்கு வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 
முகச் சிதைவு நோய் பாதித்து குணமடைந்த சிறுமிக்கு வீட்டுமனைப் பட்டா!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமான சிறுமிக்கு வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

ஜூன் 30(இன்று) தலைமைச் செயலகத்தில், அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையினையும் முதல்வர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமலிருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். 

சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை முதல்வர் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக சிறுமி டானியா குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com