அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஒரே மேடையில் தேசியத் தலைவர்கள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னை வருகை தந்துள்ளனர். 

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: ஒரே மேடையில் தேசியத் தலைவர்கள்
Updated On :1 மார்ச் 2023, 2:28 pm

DIN

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னை வருகை தந்துள்ளனர். 

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா,உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சென்னையில் நடைபெறும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். 

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.