ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த திங்கள்கிழமை(பிப். 27) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(வியாழக்கிழமை) 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ். இளங்கோவன் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
14 ஆவது சுற்று முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,03,769 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,268 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகளும் தேமுதிகவின் எஸ்.ஆனந்த் 949 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | நாகாலாந்தில் வரலாற்று சாதனை புரிந்த முதல் பெண் எம்.எல்.ஏ.