
துறையூர்: துறையூர் சிவன் கோயிலில் மாசி மகத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
துறையூரில் ஆத்தூர் சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ சம்பத்கெளரி உடனுறை ஸ்ரீநந்திகேஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு மாசிமகத்தையொட்டி விநாயகர், சிவன்-அம்பாள்- சோமஸ்கந்தர், சம்பத் கெளரி, வள்ளி தெய்வானை முருகர், சண்டேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், திருநீர், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியபொடி, தேன், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புது வஸ்திரம் சாற்றி மலரலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு புது வஸ்திரம் சாற்றி மலரலங்காரம் செய்து மகா தீபாரதனை நடைபெற்றது.
இதையும் படிக்க | திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்
அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
மாசி மக சிறப்பு பூஜைக்குழுவினர் உபயதாரர்கள் உதவியுடன் கோயில் குருக்கள் நந்தி, சிவராமன்,கோபால் ஆகியோரைக் கொண்டு சிறப்பு பூஜை ஏற்பாடுகளை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.