இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு எப்போது வெளியாகும்?

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பப்பதிவு எப்போது வெளியாகும்?


2023-24 ஆம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்துள்ள நிலையில், இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

2023-24 ஆம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிக்காண் நுழைவுத் தேர்வு(நீட்) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 277 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட மையங்களில் நடந்தது. சுமார் 2 லட்சம் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வரும் 31 ஆம் தேதி இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளன. அதன்பின்னர், கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் இதர இளங்கலை படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

இந்த நிலையில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை(மார்ச்.6) முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, தேசிய தேர்வு முகமையின் இணையதளத்திலோ வெளியிடப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com