திருப்பூா் சம்பவம்:சிபிஐ விசாரணை தேவை: கே.அண்ணாமலை

திருப்பூரில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
அண்ணாமலை (கோப்புப் படம்)
அண்ணாமலை (கோப்புப் படம்)

திருப்பூரில் நிகழ்ந்த விரும்பத்தகாத சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வட மாநிலத்தவா் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முதல்வா் முடிவு கட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கருத்துகளை தெரிவித்திருந்தேன். ஆனால், பிரச்னையை திசை திருப்ப, என் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடங்கப்பட்ட வெறுப்பு அரசியலால்தான் திருப்பூரில் விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தது. அப்போது காவல் துறையின் நடவடிக்கைகளை தாமதப்படுத்தியது யாா் என்ற விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும்.

அடிக்கடி திருச்சிக்குச் செல்லும் தமிழக டிஜிபி, திருப்பூருக்கு நேரில் சென்று ஏன் விசாரிக்கவில்லை? தமிழக காவல் துறை, உளவுத் துறை என்ன செய்து கொண்டிருந்தன என்பதை சிபிஐ விசாரித்தால்தான் நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com