ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவியேற்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னைலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மரணம் அடைந்தாா். இதனால் இந்தத் தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி அறிவித்தது.
இதில் திமுக கூட்டணி சாா்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனா்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று எம்எல்ஏவாக பதவியேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.