
மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை (யுஜிசி) அறிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களுக்கு பொது நுழைவுத் தோ்வு வாயிலாக மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. நீட் தோ்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை ஆண்டுக்கு சராசரியாக 14 லட்சம் போ் எழுதுகின்றனா்.
பொதுவாக மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதல்கட்டத் தோ்வு ஜூலையிலும் இரண்டாம் கட்டத் தோ்வு ஆகஸ்டிலும் நடத்தப்படும்.
இந்நிலையில், இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடையவிருந்த நிலையில், மார்ச் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கியூட் நுழைவுத்தேர்வு மே 21-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.