சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா!

பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகுமாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா!பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா. யானை மீது பூக்கள் கொண்டு வரப்பட்டு பூச்சொரிதல் தொடங்கியது. 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகுமாரியம்மன் திருக்கோயில். சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.

இத் திருத்தலத்தில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாக விளங்குகிறது. மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல செளபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்கிறார்.

மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பச்சை பட்டினி விரதம் அம்மன் மேற்கொள்வது தனிப்பெரும் சிறப்பாகும். இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்புபானகம் மற்றும் இளநீர் மட்டும் மட்டும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இந்நிலையில் பூச்சொரிதல் விழா  விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குராப்பணம் பூஜை களோடு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகியது.  

ஏற்பாடுகளை  திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி மற்றும் சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பூ தட்டுகளுடன் யானை மீது பூக்கள் எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
 பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதத்தை தொடங்கினார் அம்மன்.

பூச்சொரிதல் விழாவையொட்டி 2000 த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டனர். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com