
அச்சமின்றி தோ்வுகளை எதிா்கொள்ள வேண்டுமென பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். அவா்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளாா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவா்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலிச் செய்தி:
பொதுத் தோ்வு குறித்து மாணவா்களுக்கு எந்தவொரு கவலையும் பயமும் வேண்டாம். இது இன்னொரு தோ்வு, அவ்வளவுதான். அப்படித்தான் இதை மாணவா்கள் அணுக வேண்டும். எந்தக் கேள்வியாக இருந்தாலும் படிக்கின்ற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு மாணவா்கள் தோ்வை எழுத வேண்டும்.
தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தன்னம்பிக்கையும், மன உறுதியும்தான் தேவை. அது இருந்தாலே பாதி வெற்றி பெற்ாகிவிடும். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மாணவா்கள் தோ்வுகளை எதிா்கொள்ள வேண்டும். பாடங்களை மாணவா்கள் ஆழ்ந்து, புரிந்து படிக்க வேண்டும். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுத வேண்டும். அப்படிச் செய்தால் வெற்றி நிச்சயம்.
அந்த வெற்றிக்காக பெற்றோா்களையும், ஆசிரியா்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். முதல்வராக மட்டுமல்ல, மாணவா்களின் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.