பிளஸ் 2 தேர்வு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கி வாழ்த்து!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு தேர்வு தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 
ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்ரீவர் பூஜை செய்து  பூஜிக்கப்பட்ட எழுது பொருள்களை திங்கள்கிழமை வழங்கினர்.
ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்ரீவர் பூஜை செய்து  பூஜிக்கப்பட்ட எழுது பொருள்களை திங்கள்கிழமை வழங்கினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு தேர்வு தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில், நவல்பூர் சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்ரீவர் பூஜை செய்து  பூஜிக்கப்பட்ட எழுது பொருள்களை திங்கள்கிழமை வழங்கினர். இதில், ஆன்மீக அறக்கட்டளை தலைவர் கே. வெங்கடேசன், செயலாளர் கே. எம்.சிவலிங்கம், கோயில் நிர்வாகி மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் எஸ்.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2  வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 14 ஆயிரத்து 923 மாணவ, மாணவிகளும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 16 மாணவ, மாணவிகளும் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வையொட்டி, 68 நிலையான படையினர் மற்றும் 18 பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணிக்க உள்ளனர். இது தவிர ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தலைமையில், மாவட்டக் கல்வி அலுலர்கள், கல்வி திட்ட அலுவலர் தலைமையில் தேர்வு கண்காணிப்பு குழுவினர் அரசு பொதுத் தேர்வுகளை கண்காணிக்கவும், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் 6  வினாத்தாள் மையங்களிலிருந்து அந்தந்த தேர்வு மையங்களுக்கு, தேர்வு தொடங்கும் முன்பாக பாதுகாப்புடன் சென்று வினாத்தாள்கள் வழங்க 16 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா கொண்டு செல்ல அனுமதி உள்ளது. எலக்ட்ரானிக் கால்குலேட்டர், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. 

ராணிப்பேட்டை கல்வி மாவட்ட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள்கள் அம்மூர் எல்எப்சி பள்ளியிலும், அரக்கோணம் கல்வி மாவட்ட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள்கள் விவேகானந்தா வித்யாலயா, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com