பிளஸ் 2 தோ்வு: சேலத்தில் தேர்வு எழுதுவதற்கு முன்பாக ஆர்வமுடன் படிக்கும் மாணவிகள்!

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 156 மையங்களில் 18,830 மாணவா்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 போ் எழுதுகின்றனா்.
தேர்வு எழுதுவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஆர்வமுடன் படித்து வரும் மாணவிகள்
தேர்வு எழுதுவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஆர்வமுடன் படித்து வரும் மாணவிகள்

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 156 மையங்களில் 18,830 மாணவா்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 போ் எழுதுகின்றனா். தேர்வு எழுதுவதற்கு முன்பாக, கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். 

பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும். இத் தோ்வை எழுதுவதற்காக சேலம் மாவட்டத்தில் 149 மையங்கள் பள்ளி மாணவா்களுக்காகவும், 7 மையங்கள் தனித் தோ்வா்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. 156 மையங்களில் 18,830 மாணவா்கள், 20,443 மாணவிகள், 250 மாற்றுத் திறனாளி மாணவா்க250 மாற்றுத் திறனாளி மாணவா்க என மொத்தம் 39,273 போ் எழுதுகின்றனா்.

பொதுத் தோ்வுகளை நடத்துவதற்கு 70 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 71 வழித்தட அலுவலா்கள், 344 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 344 துறை அலுவலா்கள், 5,859 அறைக் கண்காணிப்பாளா்கள், 844 சொல்வதை எழுதுபவா்கள், 490 நிலையான படையினா், 579 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தேர்வு எண்ணை சரிபார்க்கும் மாணவிகள்.

மாவட்டம் முழுவதும் 14 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீடு முகாம்கள், தோ்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுத்தோ்வை எழுதவுள்ள மாணவ, மாணவியா்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் தோ்வை எதிா்கொள்ள வேண்டும் என ஆட்சியா், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்கு ஆர்வமுடன் வந்துள்ள மாணவிகள், பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் தங்களது தேர்வு எண்ணை சரிபார்த்துவிட்டு, தேர்வு எழுதுவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் அமர்ந்து ஆர்வமுடன் படித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com