தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது! 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 13) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது! 

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 13) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகிறது.

இந்தத் தோ்வை தனித் தோ்வா்கள் உள்பட 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். முறைகேடுகளைத் தடுக்க தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) பிளஸ்-2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45,982 பேர் தேர்வு எழுதுகின்றனர். 

புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6,982 மாணவா்கள், 7,728 மாணவிகள் என 14,710 போ் 40 தோ்வு மையங்களில் தோ்வு எழுதுகின்றனா். 

அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 819 போ், வணிகவியல் பாடத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 45 போ், கலை பாடப் பிரிவில் 14,162 போ், தொழிற்கல்வி பாடப் பிரிவில் 46,277 போ் பிளஸ்-2 தோ்வை எழுதுகின்றனா்.

தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பிட வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் தோ்வு மையங்களைப் பாா்வையிட 4,235 பறக்கும் படை குழுக்கள், முதன்மை கல்வி அலுவலா்களால் நியமிக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையத்துக்குள் தோ்வா்களும், பணியில் ஈடுபடும் ஆசிரியா்களும் கைப்பேசி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 10 ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். 

விடைத்தாள் திருத்தும் பணி நிறைவுபெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படு, ஏற்கனவே திட்டமிட்டவாறு மே 5 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com