ரசீது கேட்ட இளைஞரை அடித்து விரட்டிய இ-சேவை மைய ஊழியர்கள்!

காரைக்குடி நகராட்சி இ - சேவை மையத்தில் ரசீது கேட்ட இளைஞரை  ஊழியர்கள் தாக்கும் விடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரசீது கேட்ட இளைஞரை அடித்து விரட்டிய இ-சேவை மைய ஊழியர்கள்!

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் உள்ள இ-சேவை மையத்தில் ரசீது கேட்ட இளைஞரை சேவை மைய ஊழியர்கள் தாக்கிய விடியோ சமூக வளைதளங்களில் (செவ்வாய்க்கிழமை) வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு காரைக்குடி அருகேயுள்ள பலவான்குடியைச் சேர்ந்த ஹரி (22) என்ற இளைஞர் தனது தங்கைக்கு கட்டாய கைரேகை பதிவு செய்ய திங்கள் கிழமை அழைத்து வந்துள்ளார்.

கைரேகை பணி முடிந்தவுடன் ரூபாய் 120 வழங்கியுள்ளார். இதற்கான ரசீது தரும்படி ஹரி, சேவை மைய  ஊழியர்களிடம் கேட்டுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்தும் ரசீது தர ஊழியர்கள் மறுத்துள்ளனர். 

பெண் ஊழியர் ரசீதை பையில் எடுத்து ஒளித்து வைத்துள்ளதாக புகார் எழுப்பிய ஹரி, பெண் ஊழியரிடம் இருந்து ரசீதை வாங்க முற்பட்டபோது இளைஞரை ஊழியர்கள் பிரியா மற்றும் கோகுல் இருவரும் அடித்து வெளியேற்றினர். 

இதைப் பார்த்த பொதுமக்கள் கேள்வி கேட்டால் அடிப்பீங்களா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இ-சேவை மையத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை கைபேசியில் விடியோ பதிவு செய்து சமூக வளைதளங்களில் பரவச் செய்துள்ளனர்.

இருதரப்பினரும் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com