திருச்சியில் இளைஞர் பலி: இன்ஃப்ளூயன்ஸா காரணமா?
திருச்சியில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் நண்பர்களுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பாதியிலேயே திருச்சி திரும்பியுள்ளார்.
கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் மார்ச் 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட இளைஞர், மார்ச் 10-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? குடியரசுத் தலைவர் பதில்
பரிசோதனையின் போது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவரின் மாதிரிகள் இன்ஃப்ளூயன்ஸா(எச்3என்2) பரிசோதனைக்காக மருத்துவமனை தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.