புக்கர் பரிசு போட்டி: பெருமாள் முருகனின் நாவல் தேர்வு!

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுப் போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் மொழி பெயர்ப்பான பைர் நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
பெருமாள் முருகன்.
பெருமாள் முருகன்.


2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுப் போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் மொழி பெயர்ப்பான பைர் நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இலக்கியத் துறையில் சிறந்த ஆக்கங்கள் எனக் கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் பரிசுப் போட்டிக்கு அனுப்பப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த தில்லியில் வசிக்கும் எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ ஹிந்தியில் எழுதிய ‘ரெட் சமாதி’ நாவல் ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கவனத்தை ஈர்த்ததால் புக்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது.

இறுதிச் சுற்றில் பங்குபெற்ற 6 புத்தகங்களில் ஒன்றான ‘டோம்ப் ஆஃப் சாண்ட்’ நடுவர்களால் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘புக்கர்’ பரிசை வென்றது. 

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுப் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய  ‘பூக்குழி’ நாவல்  ‘பைர்’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கவனத்தை ஈர்த்ததால் இந்த முறை புக்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான புக்கர் பரிசுப் போட்டியில் வேறு 12 எழுத்தாளர்களின் நாவல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு புக்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  

2016 ஆம் ஆண்டு வெளியான ‘பூக்குழி’  நாவல் அனிருத்தன் வாசுதேவன் என்பவரால் ‘பைர்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com