பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

வைரஸ் காய்ச்சல் பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் பரவி வரும் நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

வைரஸ் காய்ச்சல் பரவலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் பரவி வரும் நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சலால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதால், புதுச்சேரி பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தேர்வுகள் முன்னதாகவே நடத்தப்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த விளக்கம்:

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு எந்த சூழலும் ஏற்படவில்லை. இருப்பினும், மருத்துவத்துறையின் ஆலோசனைப்படி செயல்படுவோம். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முன்னதாகவே நடத்த இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும், 12-ஆம் வகுப்பு மொழித் தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான தகவல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com