தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


தஞ்சாவூர்: சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை விழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு காலை -  மாலை என இருவேளைகளும் சாமி புறப்பாடு நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்றது. 

முன்னதாக தேரில் எழுந்தருளிய தியாகராஜர் மற்றும் கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பின்னர், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகர மேயர் ராமநாதன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.  

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தேருக்கு முன்னதாக விநாயகர், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் எழுந்தருளியுள்ளனர்.

ராஜ வீதிகளில் 14 நிலைகளில் பக்தர்கள் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணியில் 400-க்கும்  மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

தீயணைப்புத்துறை - சுகாதாரத் துறையினர்  தயார் நிலையில் உள்ளனர். மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ராஜ வீதிகளும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com