மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை: திருப்பூர் துரைசாமி

மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்று திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.
மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை: திருப்பூர் துரைசாமி

மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்று திருப்பூர் சு.துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதிமுகவில் முன்னணி தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை. இக்கட்சியை காப்பாற்ற இப்போதே திமுகவில் இணைத்துவிட வேண்டும். மதிமுகவில் உள்ள இளைஞர்களின் எதிர்கால நலனுக்காக திமுகவுடன் இணைத்துவிட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ, திருப்பூர் துரைசாமி குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். அதில், மதிமுக முக்கிய காலக்கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை, மதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நிராகரிக்கிறேன். கட்சியை திமுகவுடன் இணைக்கும் எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை. மதிமுக 30 வருடங்களாக தனித்தே இயங்குகிறது, இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும். 

அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, 2 வருடமாக கட்சியில் சரியாக செயல்படவில்லை. மதிமுகவினர் வற்புறுத்தியதால்தான் என் மகன் துரைவைகோ அரசியலுக்கு வந்தார். ஜனநாயக முறைப்படி கட்சியில் அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மதிமுக அவைத் தலைவா் துரைசாமி திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். 

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவில் இருந்து மதிமுக பிரிந்து வந்தபோது, வாரிசு அரசியலுக்கு எதிராக பொதுச் செயலா் வைகோ குரல் கொடுத்தாா்.  இப்போது உள்கட்சித் தோ்தலில் துரை வைகோவுக்கு வேண்டப்பட்டவா்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

அப்போது, சிலரது தூண்டுதலின்பேரில்தான் நீங்கள் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருவதாக துரை வைகோ கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவரது கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில நாள்களில் வைகோவிடம் இருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றாா்.

இதனிடையே மதிமுகவை திமுகவோடு இணைத்துவிடலாம் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோவுக்கு அக் கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com