இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: வெயில் மேலும் அதிகரிக்கும் என தகவல்!

தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இது மே 29-ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: வெயில் மேலும் அதிகரிக்கும் என தகவல்!

தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இது மே 29-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெயில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெப்பம் போதும் போதும் என்ற அளவுக்கு அடித்துத்தள்ளும். அதிலும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போன்று வெயில் பிளந்து எடுக்கும்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிப்ரவரி முதலே வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதலாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து மழை மேகங்களாக மாறி மக்களின் மனதைக் குளிர்வித்துள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பகல் பொழுதில் சற்று குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழையும் பெய்து வருகின்றது. 

ஆனால், இதே நிலை நீடிக்குமா என்றால்... நிச்சயம் இல்லை. இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், மே 5 முதல் மே 7 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், இது படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அதிகப்படியான தண்ணீர் அருந்துவதும், உடல் அதிக சூடு ஆகாமலும் பார்த்துக்கொள்ளவும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள். 

முக்கியமாக அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com