
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்/
சென்னை கலைவாணர் அரங்கில்,. ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய பயன்கள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இதில், ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி என்ற தமிழக அரசின் சாதனை மலரையும் முதல்வர் வெளியிட்டார்.
பின்னர் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன். மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.
மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கான உரிமையை காத்திட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து வருகிறோம். கடந்த ஆட்சியில் சீரழிந்து கிடந்த துறைகளை நாங்கள் சரி செய்திருக்கிறோம்.
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று தெரியும்.
மக்களை சாதியால், மதத்தால் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் பற்றி தெரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருப்பவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.