அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆம் ஆண்டு நிறைவையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆம் ஆண்டு நிறைவையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள், எம்.பிக்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும். விமர்சனங்களை பற்றி கவலைப்படமாட்டேன், நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஞாயிற்றுக்கிழமையுடன் (மே 7) இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, ஒரு லட்சம் பேருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய பலன்கள் அளிக்கும் திட்டத்தை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com