வனத்துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர்  நேரில் ஆய்வு!

தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (மே 7) தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
வனத்துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர்  நேரில் ஆய்வு!
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (மே 7) தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின்போது, சென்னை, பெசண்ட் நகர், எலியாட்ஸ் கடற்கரையில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட ஆமை பொறிப்பகத்தில் உள்ள ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது. கடல் ஆமைகள் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்கேற்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பள்ளிக்கரனை சுற்றுச்சூழல் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட தலைமைச் செயலாளர், தமிழ்நாட்டில் உள்ள 14 ராம்சார் தளங்களையும் இயற்கையாக பாதுகாத்திட தேவையற்றகளைச் செடிகளை அகற்றிட வேண்டும் எனவும், வனப் பகுதியில் வனப்பாதுகாவலர்களுக்கு வழங்கப்படவுள்ள (e-bike) மின் மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனங்களையும் பார்வையிட்டு இதனால் வனப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்தார்.

வண்டலூர் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு (பயிற்சி மற்றும் ஆராய்ச்சி) நிறுவனத்தில் ரூபாய்.7.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான பயிற்சி விடுதி மற்றும் வன உயிரினங்கள் ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வகங்களை( DNA Sequence Lab, Histo pathology Lab, Genetic Analizer) ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், வன உயிரினங்கள் மீட்பு ( தொடர் சிகிச்சை) மையத்தில் வன உயிரினங்கள் பராமரிக்கப்படுவதையும் , இரவு நேரத்தில் இயங்கும் உயிரியல் பூங்கா தொடங்குவதற்கான பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வாகன நிறுத்துமிட வளாகத்தில் தமிழ்நாடு முதல்வர் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டபோது ஒரே நேரத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ளதையும், பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 2021..23 ஆம் ஆண்டுகளில் 2 கோடியே 84 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், 2023..24 ஆம் ஆண்டில் 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். 

வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் மழைநீரை சேகரித்திட அமைக்கப்பட்டுள்ள ஏரி பராமரிப்பையும் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா ஸாஹு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் இயக்குநர் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு (பயிற்சி மற்றும் ஆராய்ச்சி) நிறுவனம் அ.உதயன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாஸ் ரா.ரெட்டி, கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் காப்பகம்) ஆகாஷ் தீப் பருவா, பசுமை தமிழ்நாடு இயக்கம் முதன்மை இயக்குநர் தீபக் ஸ்ரீவத்சவா, சென்னை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் திருமதி கே.கீதாஞ்சலி மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com