உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக அவதூறு வழக்கு

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் மாநிலங்களவை எம்.பி.யுமான ரஞ்சன் கோகோய் மற்றும் அவரது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்துக்கு
Published on
Updated on
1 min read

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் மாநிலங்களவை எம்.பி.யுமான ரஞ்சன் கோகோய் மற்றும் அவரது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்துக்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் 2019 வரை உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவி வகித்தாா். தற்போது, அவா் மாநிலங்களவையில் நியமன எம்.பி.யாக உள்ளாா். அவருடைய ‘ஜஸ்டிஸ் ஃபாா் எ ஜட்ஜ்’ என்ற சுயசரிதைப் புத்தகத்தை ரூபா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாம் பொது சேவைகள் என்ற என்ஜிஓ அமைப்பின் தலைவா் அபிஜீத் சா்மா, தன்னை குறித்தான தவறான மற்றும் அவதூறு கருத்துகள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக காமரூப் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ள அபிஜீத் சா்மா, புத்தகத்தைப் பதிப்பிக்கவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்க கோரி மனு ஒன்றையும் தாக்கல் செய்தாா்.

இவ்விரு மனுக்களும் செவ்வாய்கிழமை விசாரிக்கப்பட்டன. மனுதாரா் மற்றும் எதிா்தரப்பினருக்கு நோட்டீஸ் வழங்க புதன்கிழமை உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சட்டவிரோதமாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் குடியேறியவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலிருந்து நீக்குமாறு அஸ்ஸாம் பொது சேவை அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதனைத் தொடா்ந்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) புதுப்பிக்கும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com