
தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெயில் இன்று (மே 14) சதமடித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி சில நாள்களாக மழை பெய்தது. எனினும் அதற்கடுத்தடுத்த நாள்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
கடந்த மாதம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 17 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில் இந்த மாதம் முதல் முறையாக இன்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது
குறிப்பாக கடந்த மாதம் சில முறை மட்டுமே சென்னையில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் வெயில் சதம் அடித்துள்ளது
நுங்கம்பாக்கம் 105.26 ஃபாரின் ஹீட், சென்னை மீனம்பாக்கம் 105.08 ஃபாரின் ஹீட், கடலூர் 101.12 ஃபாரின் ஹீட், ஈரோடு 102.92 ஃபாரின் ஹீட், கரூர் பரமத்திவேலூர் 104.00 ஃபாரின் ஹீட், மதுரை விமானநிலையம் 103.64 ஃபாரின் ஹீட், நாகப்பட்டினம் 100.76 ஃபாரின் ஹீட், பரங்கிப்பேட்டை 100 ஃபாரின் ஹீட்
பாண்டிச்சேரி 101.84 ஃபாரின் ஹீட், தஞ்சாவூர் 102.20 ஃபாரின் ஹீட், திருச்சி 102.74 ஃபாரின் ஹீட், திருத்தணி 103.64 ஃபாரின் ஹீட், வேலூர் 106.70 ஃபாரின் ஹீட் வெயில் இன்று பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பகுதிகளில் வாட்டிய வெயில்
கோடை சுற்றுலாதலமான ஊட்டி, கொடைக்கானலில் வழக்கத்தை விட அதிகளவில் வெயில் பதிவாகியுள்ளது. ஊட்டியில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கொடைக்கானலில் வழக்கத்தை விட 6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.