தமிழகத்தில் சென்னை உள்பட 16 இடங்களில் இன்று (மே 15) திங்கள் கிழமை வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில், இன்று 16 இடங்களில் வெயில் நூறு டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னை 105 டிகிரி ஃபாரன்ஹீட், வேலூர் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது.
மேலும், கரூர் பரமத்திவேலூர் 105, ஈரோடு 104, மதுரை விமான நிலையம், திருச்சி 103, கடலூர், புதுசேரியில் தலா 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.