ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை குடியிருப்பு கொட்டகைக்கு தீ: காயமடைந்த தொழிலாளி பலி

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை குடியிருப்பு கொட்டகைக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓடிசா மாநில தொழிலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துப்பாக்கி ஏந்திய போலீசார்

Published On :


நாமக்கல்: ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை குடியிருப்பு கொட்டகைக்கு மீண்டும் தீ வைக்கப்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓடிசா மாநில தொழிலாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடர்பாளையம் பகுதியில் வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களில் இரண்டு படுகாயம் அடைந்தனர். இரண்டு பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

Story image

சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார்.

இந்நிலையில், ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் கென்ட்(19) என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார். 

இதையடுத்து ஜேடர்பாளையம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்தும், வெல்ல ஆலைக்கூடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.