தலைவாசல், கெங்கவல்லியில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: 3 பேர் கைது

தலைவாசல் கெங்கவல்லி உள்ளிட்ட மூன்று இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை கைது
தலைவாசல், கெங்கவல்லியில் 260 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: 3 பேர் கைது

தலைவாசல்: தலைவாசல் கெங்கவல்லி உள்ளிட்ட மூன்று இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ள போலீசாக், அவர்களிடம் இருந்து 260 லிட்டர் பாக்கட் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல், கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தலைவாசல் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், வீட்டில் சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த
ஊனத்தூர் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் அருள்மணி (28) மற்றும் சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (28), அதேபோல் கெங்கவல்லி அருகே  சாத்தாப்பாடி பகுதியில் சாராயம் விற்பனை செய்த ஆத்தூர் அருகே புங்கவாடி புதூரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சிவக்குமார் (37) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 260 லிட்டர் கள்ளச்சாராய பாக்கட்டுகளையும் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அவர்களை ஆத்தூர் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com