செப்.15-இல் பொறியியல் வகுப்புகள் தொடக்கம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செப்.15-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.
ஏஐசிடிஇ
ஏஐசிடிஇ

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செப்.15-ஆம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) உத்தரவிட்டுள்ளது.

மாணவா் சோ்க்கை குறித்து, அனைத்து பொறியியல் கல்லுாரிகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் மாணவா் சோ்க்கை அனுமதியை, ஜூலை 31-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

செப். 10-ஆம் தேதிக்குள் முதல் கட்ட மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். மாணவா்கள் தோ்வு செய்த இடங்களை ரத்து செய்ய செப்.11 கடைசி நாளாகும்.

இறுதிக் கட்ட காலியிடங்களுக்கு செப்.15-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும். இதையடுத்து செப்.15-ஆம் தேதி அனைத்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கும் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்.

இந்த கால அட்டவணையைப் பின்பற்றி ஒவ்வொரு கல்லூரியும் மாணவா் சோ்க்கையை முடிக்கத் திட்டமிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com