தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் முதலில் 15 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பலி எண்ணிக்கை 22 ஆக இருந்த நிலையில் எக்கியாா்குப்பத்தைச் சேர்ந்த கன்னியப்பன்(50) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் பலி 23 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மரக்காணத்தில் 15 பேரும், மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 60 பேர் வரையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, கள்ளச்சாராயம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் இதனை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் அமைச்சராகிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.