தனி விமானம் மூலம் தில்லி சென்றார் திருவாடுதுறை ஆதீனம்!

நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனிவிமானம் மூலமாக திருவாவடுதுறை ஆதீனம் தில்லி சென்றுள்ளார். 
தனி விமானம் மூலம் தில்லி சென்றார் திருவாடுதுறை ஆதீனம்!
Updated on
1 min read

நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தனிவிமானம் மூலமாக திருவாவடுதுறை ஆதீனம் தில்லி சென்றுள்ளார். 

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே 1947ல் திருவாவடுதுறை ஆதினம் அளித்த செங்கோல் நிறுவப்படுகிறது. 

இந்த செங்கோல் இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ல்  திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் இந்திய விடுதலையை அடையாளப்படுத்தும் வகையில் அப்போதைய பிரதமா் நேருவிடம் கொடுக்கப்பட்டது. 

இப்போது மீண்டும் அந்த செங்கோல் நிறுவப்பட உள்ளதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பலரும் தில்லிக்கு சென்று திறப்புவிழாவில் கலந்துகொள்கின்றனர். 

திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் இவ்விழாவில் கலந்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் இன்று தில்லி சென்றார். 

முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com