உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.வி.கங்காபுர்வாலா

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எஸ்.வி.கங்காபுர்வாலா


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக பதிவியேற்றுக்கொண்டார். 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.துரைசாமி ஓய்வு பெற்றார். 

மூத்த நீதிபதியான டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக சுமார் 8 மாதங்கள் பணியாற்றிய டி.ராஜா கடந்த 24ஆம் தேதி ஓய்வு பெற்றார். அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா பணியில் இருப்பார். பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர் பாபு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com