திருவாரூர்-காரைக்குடி: வாரத்தில் 6 நாள்களுக்கு ரயில்கள்!

திருவாரூர் - காரைக்குடி இடையே ஜூன் 1 முதல் வாரத்தின் 6 நாட்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
திருவாரூர்-காரைக்குடி: வாரத்தில் 6 நாள்களுக்கு ரயில்கள்!

திருவாரூர் - காரைக்குடி இடையே ஜூன் 1 முதல் வாரத்தின் 6 நாட்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக வாரம் 6 நாட்கள் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாள்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது திங்கள் மற்றும் சனிக்கிழமையும் சேர்த்து மொத்தம் 6 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாரூர் - காரைக்குடி இடையிலான ரயில் காலை 8.20-க்கு புறப்பட்டு பிற்பகல் 11.45 மணிக்கு சென்றடையும். மறுமுனையில், பிற்பகல் 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வந்தடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com