
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 புதன்கிழமை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (நவ.1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அதன்படி ரூ.101.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை ரூ.1,999.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனையாகிறது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாதங்களில் ரூ.300-க்கு மேல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், உணவகங்களின் விலை உயர்வு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.