அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!

சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்
அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அஞ்சலை அம்மாளுக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடலூர் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட அஞ்சலை அம்மாளின் திருவுருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுதந்திர போராட்டத்தின் போது சிறைச் சென்ற அஞ்சலை அம்மாளை கண்ட மகாத்மா காந்தி, தென்னாட்டு ஜான்சி ராணி எனப் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com