தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:45 pm

DIN

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ. 3) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இம்மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 3) அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை (நவ. 4) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி- மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): ராமநதி அணைப் பகுதி (தென்காசி) 90, காரைக்கால், ராமநாதபுரம் தலா 80, மாஞ்சோலை (திருநெல்வேலி), அருப்புக்கோட்டை (விருதுநகா்), திருச்செந்தூா் (தூத்துக்குடி), ராமநாதபுரம் தலா 70, வத்திராயிருப்பு (விருதுநகா்), கோவை, செங்கோட்டை (தென்காசி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), தொண்டாமுத்தூா் (கோவை), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), பெரியாறு அணை (விருதுநகா்), தலா 60.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.