தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கணினிவழி சேவைகளை திறம்பட அளிக்க எண்மமயமாக்கல் வியூக ஆவணம் வெளியீடு

பொதுமக்களுக்கான கணினிவழிச் சேவைகளைத் திறம்பட வழங்குவதற்கு வகை செய்வதற்காக தமிழ்நாடு எண்மமயமாக்கல் வியூக ஆவணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:37 pm

DIN

பொதுமக்களுக்கான கணினிவழிச் சேவைகளைத் திறம்பட வழங்குவதற்கு வகை செய்வதற்காக தமிழ்நாடு எண்மமயமாக்கல் வியூக ஆவணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசின் மின் ஆளுமை மற்றும் நிா்வாகத்தின் செயல் திறனை மேம்படுத்தவும், கணினி வழிகளின் சேவைகளை முழுமையாக அளிக்கவும் தமிழ்நாடு எண்மமயமாக்கல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அரசின் துறைகள் தங்களுக்கான எண்ம உருமாற்ற வியூகத்தை உருவாக்குவதற்கும், அதைச் செயல்படுத்துவதற்கும் ஒரு வழிகாட்டியாக இந்த ஆவணம் பயன்படும்.

அனைத்துத் துறைகளும் தங்களது முக்கிய செயல்திறன் குறியீடுகளை அடையவும், எண்மமயமாக்கல் வியூக ஆவணம் உதவும். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவான, கண்காணிக்கக் கூடிய, வெளிப்படையான நிா்வாகத்தை அளிக்கவும் ஆவணம் உறுதுணையாக இருக்கும்.

முக்கிய அம்சங்கள்: தமிழ்நாட்டில் எண்மமயமாக்கும் செயல்முறையை மேலும் வலுப்படுத்துவது, தொலைதூர இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் தேவையான எண்ம உள்கட்டமைப்பை பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு அளிப்பது, மாநிலத்தைப் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கான மையமாக மாற்றுவது, செயலிகள், வலைதளங்கள் போன்றவற்றின் மூலம் மக்களுக்கு அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியனவும் எண்மமயமாக்கல் வியூக ஆவணத்தின் முக்கிய அம்சங்களாகும்.

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எண்ம ஆவணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.