திருச்சியில் அமமுக செயற்குழு தொடங்கியது!

திருச்சியில் அமமுக செயற்குழு தொடங்கியது!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
Published on

திருச்சி:  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் சி. கோபால் தலைமையிலும், பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.  

மாநிலப் பொருளாளர் எஸ்.கே. செல்வம், துணைப் பொதுச் செயலர்கள் ஜி. செந்தமிழன், எம். ரெங்கசாமி, சி. சண்முகவேலு, தலைமை நிலையச் செயலர்கள் எம். ராஜசேகரன், இ. மகேந்திரன், கொள்கை பரப்புச் செயலர் சி.ஆர். சரஸ்வதி, தேர்தல் பிரிவு செயலர்கள் என்.ஜி. பார்த்திபன், வி.பி. குமரேசன், அமைப்பு செயலர் சாருபாலா தொண்டைமான், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். 

வரும் மக்களவைத் தேர்தலில் அமமுக-வின் நிலைப்பாடு குறித்தும், தேர்தல் கூட்டணி, ஒத்தக் கருத்துள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைத்தல், எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com