கரூரில் அமைச்சா் எ.வ.வேலு தொடா்புடைய 4 இடங்களில் 2வது நாளாக சோதனை

கரூரில் மறைந்த முன்னாள் கரூா் மாவட்ட திமுக செயலாளா் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உள்பட நான்கு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அமைச்சா் எ.வ.வேலு தொடா்புடைய 4 இடங்களில் 2வது நாளாக சோதனை


கரூர்: கரூரில் மறைந்த முன்னாள் கரூா் மாவட்ட திமுக செயலாளா் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உள்பட நான்கு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவோடு தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, கரூருக்கு அதிகாலையில் மூன்று காா்களில் நான்கு குழுக்களாக, துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ வீரா்களுடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பெரியாா் நகா் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூா் மாவட்ட திமுக செயலாளா் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகா் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு, புஞ்சைத் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவா் சக்திவேல் வீடு ஆகிய இடங்களில் காலை முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். இரவு வரையிலும் சோதனை நீடித்தது.

இந்தநிலையில், வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகா் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு, புஞ்சைத் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவா் சக்திவேல் வீடு என நான்கு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com